இலங்கையில் கனமழைக்கு 30 பேர் பலி – லட்சக்கணக்கானோர் பாதிப்பு.

SHARE

Newsasia colombo

இலங்கையில் இந்த ஆண்டு பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு தொடர்ச்சியாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தால் 2 லட்சத்ததுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையில் மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 30பேர் உயிரிழந்துள்ளதாக எமது கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார். இவர்களில் 6 பேர் மின்னல் தாக்கி பலியானதாக கூறப்படுகிறது. அதே வேளையில் மழை குறைந்து வெள்ள நீர் வடிந்து வருவதால், பாதிக்கப்பட்ட பகுதிகள் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.


SHARE

Related posts

Leave a Comment