எமது டென்மார்க் செய்தியாளர் குலராஜ்
இலங்கை தமிழர் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும் நெதர்லாந்து நாட்டில் டென்காக்கில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் முன்பிருந்து, ஐநா மனித உரிம ஆணையம் நோக்கி, மனிதநேய சைக்கிள் பயணம் துவங்கியுள்ளது.
அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற வாயில் துவங்கிய சைக்கிள் பயணம் இன்று ரோட்டடாம் மாநகரை வந்தடைந்தது.
இந்த சைக்கிள் பேரணி வரும் 20தாம் தேதி சுவிஸ் சில் நிறைவடைகிறது . அங்கு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மற்றும பேரணியை நடத்தவும் ஈழ தமிழர்கள் முடிவு செய்துள்ளனர்.