ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காகவே, மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு அ.தி.மு.க., ஆதரவு அளித்துள்ளதாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,மத்திய அரசின் வேளாண் மசோதாவை, பா.ஜ.,வின் கூட்டணி கட்சிகளே எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.. அ.தி.மு.க., உள்ளிட்ட 4 கட்சிகள் மட்டுமே இந்த மசோதாவை ஆதரிப்பதாகவும், இந்த மசோதா, மாநிலங்களுக்கு உள்ளே நடக்கும் வர்த்தகத்தை கட்டுப்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார். சட்டத்திற்கு லோக்சபாவில் ஆதரவு, ராஜ்யசபாவில் எதிர்ப்பு என்ற அதிமுகவின் நிலை நகைச்சுவைக்குரியது என குறிப்பிட்டுள்ள அவர்,வேளாண் மசோதாக்கள் கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாக்குமே தவிர விவசாயிகளை பாதுகாக்காது. மாநிலங்களுக்கு உள்ளே நடக்கும் வர்த்தகத்தை கட்டுப்படுத்துகிறது. உழவர் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அனைத்திற்கும் இந்த வேளாண் மசோதாக்கள் ஆபத்தானவை என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆட்சியில் நீடிப்பதற்காகவே வேளாண் மசோதாக்களுக்கு அதிமுக ஆதரவு அளிக்கிறது என தனது அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
