தேசிய உணர்வுகளுக்கு எதிரான கட்சி திமுக என்றும் தேசிய முன்னேற்றத்திற்கு எதிராக இருப்பவர்களுக்கு தமிழக பாஜக பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பேசியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின், தமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாஜக தான் என தெரிவித்துள்ளார். மேலும், திமுக ஜனநாயக இயக்கம், வளர்ச்சியிலும், தேச உணர்வுகளிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இயக்கம் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.