ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை – பாஜக திட்டம் ?

SHARE

சென்னை, கொளத்தூர் தொகுதியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் போட்டியிட்டால், அவரை எதிர்த்து, பா.ஜ., வேட்பாளராக, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலையை நிறுத்த, பா.ஜ., மேலிடம் ஆலோசித்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன..

நடைபெறவுள்ள தமிழக சட்ட பேரவை தேர்தலில், தி.மு.க., – காங்., கூட்டணியை வீழ்த்துவதற்கு, பா.ஜ., பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் பணியில் இருந்த அண்ணாமலை என்பவரை சமீபத்தில் களத்தில் இறக்கியது பாஜக.இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் அண்ணாமலையை நிறுத்த, கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்பரவி வருகிறது.

இந்த திட்டம் பாஜகவினரை உற்சாக படுத்தும் வகையில் உள்ளதாக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த திட்டம் வடிவேல் படத்தில் வருவது போல நகைச்சுவை திட்டம் என திமுகவிர் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் பிற வட மாநிலங்களை போல தன்மையுள்ளது அல்ல என தெரிவித்துள்ள திமுகவினர்,முதலில் அண்ணாமலை நோட்டாவை விட அதிக வாக்கு பெறுவாரா என்பதை முதலில் பார்போம் என தெரிவித்துள்ளர்.

அரசியலுக்கு வந்த ஒரே வாரத்தில் அண்ணாமலை யார் என்பதை சமூக வலைதளங்களே தமிழக மக்களுக்கு தெரிவித்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


SHARE

Related posts

Leave a Comment