பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் வாட்சன், டுபிளசி அரைசதம் கடந்து கைகொடுக்க சென்னை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. துபாயில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்ற பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.பஞ்சாப் அணிக்கு கேப்டன் லோகேஷ் ராகுல் (63), பூரன் (33) கைகொடுக்க, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. சென்னை சார்பில் ஷர்துல் தாகூர் 2 விக்கெட் கைப்பற்றினார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு வாட்சன் (83*), டுபிளசி (87*) அரைசதம் கடந்து கைகொடுக்க, 17.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து வெற்றி பாதைக்கு திரும்பியது.