‘சூப்பர் பணக்காரர்கள்’ பட்டியலில் முகேஷ் அம்பானி

SHARE

 உலகளவில், 100 பில்லியன் டாலர் அதாவது, 7.50 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் செல்வந்தர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானியும் இணைந்துள்ளார்.முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்ததை அடுத்து,’டெஸ்லா’ நிறுவனர் எலான் மஸ்க், ‘அமேசான்’ நிறுவனர் ஜெப் பெசோஸ் போன்றோரை கொண்ட ‘எலைட்’ பட்டியலில் அவர் சேர்ந்திருப்பதாக, ‘புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் தகவலின்படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 7.55 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ், உலகளவில் 500 பெரும் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இந்த பட்டியலில், 100 பில்லியன் டாலருக்கும் மேல் சொத்து மதிப்பு கொண்டவர்கள் எண்ணிக்கை, தற்போது முகேஷ் அம்பானியுடன் சேர்த்து 11 ஆக உள்ளது. இதில், 11 வது இடத்தில் அம்பானி உள்ளார். ஆசியாவில் முதலிடத்தில் உள்ளார்.பங்குச் சந்தையில், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்ததை அடுத்து, அம்பானியின் சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது.


SHARE

Related posts

Leave a Comment