தலிபான்கள் வசம் 18 மாகாணங்கள் – அலரும் ஆப்கன் அரசு

SHARE

ஆப்கனில் தொடர் சண்டையில் அடுத்தடுத்து மாகாணங்களை தலிபான் படை கைப்பற்றி வருவதையடுத்து அதிபர் முகம்மது அஷ்ரப் கானி ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் இம்மாத இறுதிக்குள் முழுமையாக வெளியேற உள்ளன. இதையடுத்து ஆப்கனை மீண்டும் கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள் ராணுவத்துடன் கடுமையாக போரிட்டு வருகின்றனர்.

நேற்று வரை 10 மாகாணங்கள் தலிபான் வசம் வந்தன. எனினும் ஆப்கன் ராணுவம் அமெரிக்க விமானப் படை உதவியுடன் தொடர்ந்து தலிபான்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று நடந்த சண்டையில் மேலும் 8 மாகாணங்கள் என இதுவரை 18 மாகாணங்களை தலிபான்கள் கைபற்றியுள்ளனர். தற்போது தலைநகர் காபூலில் இருந்து 80 கி.மீ., தொலைவில் உள்ள கஜினி நகரை கைப்பற்றியுள்ள தலிபான்கள் வெற்றி முழக்கமிட்டபடி வாகனங்களில் கஜினி நகரை வலம் வருகின்றனர். காபூல் நகரை நெருங்கி வருவதாக கூறப்பட்டு வருகிறது.

ஆட்டம் கானும் ஆப்கன் அரசு

இதுவரை 18 மாகாணங்கள் தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால், அதிபர் அஷ்ரப் கானிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனால் விரைவில் அதிபர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகவும்,. இது தொடர்பாக அதிபர் முகம்மது அஷ்ரப் கானி இன்று (ஆக.13) அல்லது நாளை (ஆக்.14) நாட்டு மக்களிடம் உரையாட உள்ளார். அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பே, கூறுகையில், அஷ்ரப் கானி ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்றார்.


SHARE

Related posts

Leave a Comment