அமெரிக்காவில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானில் ஆட்சி செலுத்தி வந்த தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா். அதையடுத்து, கடந்த 2001-ஆம் ஆண்டில் அந்த நாட்டின் மீது படையெடுத்த அமெரிக்கா, தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது.
இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினரை முழுமையாக திரும்ப அழைத்துக் கொள்வதற்கான இறுதிக்கப்பட்ட பணிகள் கடந்த மே மாதம் தொடங்கியது.
அதிலிருந்து அந்த நாட்டின் கிராமப் புறங்களில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி புதிய பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறி வந்தனா். படிப்படியாக முன்னேறி வந்த தலிபான்கள் இன்று தலைநகர் காபூலையும் தங்கள் காட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி மற்றும் துணை அதிபர் அம்ருல்லா சாலேயும் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாளைக்குள் முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் என்றும் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்களின் ஆட்சி அமைவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் கொள்ளை மற்றும் குழப்பங்களை தடுக்கவே ஆக்கிரமிப்பு செய்தோம் என தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
இதனிடையே தலிபான் தளபதிகள் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகையின் கட்டுப்பாட்டை எடுத்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
