ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகருக்குள் தலிபான்கள்

SHARE

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத்தொடங்கியதையடுத்து, அந்நாட்டில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக, தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளனர். இதனால், பல முக்கிய நகரங்களை தலிபான்கள் அடுத்தடுத்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 
ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஜலலாபாத் நகரத்தையும் இன்று காலை தலிபான்கள் கைப்பற்றினர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகருக்குள் தலிபான்கள் நுழைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. தலிபான்கள் நுழைந்து இருப்பதாக காபூலில் வசிக்கும் மக்கள் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.  காபூல் நகருக்குள் தலிபான்கள் ஊடுருவிட்டதால் விரைவில் ஒட்டுமொத்த ஆப்கன்  நாடும் தலிபான்கள் கட்டுக்குள் வரும் எனக் கூறப்படுகிறது. 
இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியின் தலைமை அலுவலர்  வெளியிட்ட டுவிட் பதிவில், “ யாரும் அச்சப்பட வேண்டும், காபூல் பாதுகாப்பாக உள்ளது” என பதிவிட்டுள்ளார். 


SHARE

Related posts

Leave a Comment