எங்களால் யாருக்கும் ஆபத்து இருக்காது-தாலீபான்

SHARE

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றி உள்ளனர். அவர்கள் மத கோட்பாடுகளை கடுமையாக அமல்படுத்துபவர்கள் என்பதால், பலர் நாட்டை விட்டு தப்ப முயன்று வருகிறார்கள்.தப்பிச்செல்லாத மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். பரவலாக அச்சம் நிலவி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் தாலீபான்கள், முதல் முறையாக செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்கின்றனர். இந்த சந்திப்பில் எதிர்காலத்தில் அவர்களுடைய செயல்பாடு, திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்திருக்கின்றனர். 
தலீபான்கள் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ஆப்கானிஸ்தானில் சண்டை முடிந்தது. காபூல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும். போரின் போது மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஒரு விபத்து தான், உள்நோக்கத்துடன் கூடியது கிடையாது. தாலீபான்கள் அனைவரையும் மன்னித்து விட்டது, முன்னாள் ராணுவ வீரர்கள், வெளிநாட்டு படைகளுக்காக வேலை செய்தவர்கள் என யார் மீதும் எங்களுக்கு பழிவாங்கும் எண்ணம் கிடையாது. அவர்களின் வீடுகளை சோதனையிட மாட்டோம்.
ஆப்கானிஸ்தானில் இருந்து எந்த நாட்டிற்கும் அச்சுறுத்தல் இருக்காது என்பதை உலக நாடுகளுக்கு  உறுதி அளிக்கிறோம். இஸ்லாமிய சட்டத்தின் கட்டமைப்புக்கு உட்பட்டு  பெண்களின் உரிமைகளுக்கு முழு மதிப்பளிப்போம், ஊடக சுதந்திரமும் அளிக்கப்படும்” என்றார்.


SHARE

Related posts

Leave a Comment