ஆப்கானில் தலிபான்கள் இன்று ஆட்சி பொறுப்பேற்பு – பஞ்சஷிரை கைப்பற்ற உச்சகட்ட போர்

SHARE

கடந்த 30ம் தேதி நள்ளிரவில் அமெரிக்காவின் கடைசி படை வெளியேறிய நிலையில், புதிய ஆட்சிக்கான பணிகளை தலிபான்கள் மும்முரமாக தொடங்கினர். தலிபான்களின் தலைமை மத தலைவராக ஹைபதுல்லா அகுன்சதா இருப்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இவர் கந்தகாரில் இருந்தபடி மத விவகாரங்களையும், ஆட்சி நிர்வாகத்தையும் மேற்பார்வையிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தலிபான் அமைப்பின் துணை நிறுவனரான முல்லா பரதர் தலைமையில் தலிபான் துணை நிறுவனர்களில் ஒருவரான முல்லா ஓமரின் மகன் முல்லா முகமது யாகூப் மற்றும் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானெக்சாய் ஆகிய 3 பேர் உயர் பதவி வகிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லா பரதர் தலைமையில் 25 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது. இது தவிர 12 மத தலைவர்களும் ஆட்சியில் அங்கம் வகிப்பர். கடந்த 1996-2001 வரை தலிபான் ஆட்சி ஷரியத் சட்டத்தின்படி நடந்தது. அப்போது, பெண்கள் மீது பல்வேறு அடக்குமுறைகள் செய்யப்பட்டன. இம்முறை அனைவரையும் உள்ளடக்கிய சுமூகமாக ஆட்சி நடக்கும் என தலிபான்கள் உறுதி அளித்துள்ளனர்.

தலிபான்கள் தலைமையிலான புதிய அரசு அமைவதற்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என நேற்று தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, புதிய தலிபான் அரசு இன்று பதவியேற்க உள்ளதாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.

அதே சமயம், ஆப்கானில் பஞ்சஷிர் மாகாணம் மட்டும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அதை பிடிக்க ஏற்கனவே ஆயிரக்கணக் கான தரிபான்கள் அனுப்பப்பட்டு கிளர்ச்சிப் படையுடன் உள்நாட்டு போர் நடக்கிறது. இந்த போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கிளர்ச்சிப் படையின் முக்கிய 3 தலைவர்களை கொன்று விட்டதாக தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.


SHARE

Related posts

Leave a Comment