இந்தியாவில் பயிற்சி பெற்ற தாலிபான் தளபதி

SHARE

இந்திய ராணுவ அகாடமியில் தாலிபான் மூத்த தலைவரான ஷெர் முகமது அப்பாஸ் ஸ்தானிக்ஜாய், பயிற்சி பெற்றது தற்போது தெரிய வந்துள்ளது.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். அதிபர் அஷ்ரப் கனி, நாட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து, அதிகாரம் முழுதும் தற்போது தலிபான் வசம் வந்துள்ளது.இந்நிலையில், இந்த தலிபான் அமைப்பின் ஏழு மூத்த தலைவர்களில் ஒருவரான ஷெர் முகமது அப்பாஸ் ஸ்தானிக்ஜாய் என்பவர், உத்தரகண்டின் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி எடுத்தது தற்போது தெரிய வந்துள்ளது. தன் 20வது வயதில், ஆப்கன் ராணுவத்தின் சார்பில் இங்கு வந்து அகாடமியில் பயின்ற இவர், 1996ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து விலகி, தாலிபான் அமைப்பில் இணைந்துஉள்ளார்.

ஸ்தானிக்ஜாய் குறித்து, அவருடன் பயின்ற முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சதுர்வேதி கூறியதாவது:ஷெரு என அன்புடன் அழைக்கப்படும் ஷெர் முகமது அப்பாஸ் ஸ்தானிக்ஜாய், அனைவரும் விரும்பக்கூடிய நபராக திகழ்ந்தார்.அவர் எந்த வொரு மதத்தையும் சாராமல் இருந்து வந்தார்.அந்த காலத்தில் தீவிர வாத கருத்துகள் எதையும் அவர் வெளிப்படுத்தியது இல்லை. ஆப்கனை சேர்ந்த அவர், இங்கு பயிற்சியில் இருந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், மற்றொரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் கேசர் சிங் ஷெகாவத் கூறியதாவது:ஷெரு, நன்றாக பழகக் கூடியவர். ஒரு முறை நானும், அவரும் ரிஷிகேஷுக்கு சென்று, கங்கை நதியில் நீராடியது என் நினைவில் இன்றளவும் உள்ளது. அதன் புகைப்படம் ஒன்றும் என்னிடம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


SHARE

Related posts

Leave a Comment