*தமிழக போலீசாருக்கு ரூ.8,930.29 கோடி ஒதுக்கீடு.14,317 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்
*தீயணைப்பு துறை ரூ.405.13 கோடி
*பேரிடர் மேலாண்மை துறைக்கு ₹1,360 கோடி ஒதுக்கீடு.
*சாலை பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.500 கோடி
*நீதித்துறை நிர்வாகத்திற்கு ரூ.1,713.30 கோடி
*பொது விநியோக திட்டத்தில் உணவு மானியத்திற்கு ரூ.8,437.57 கோடியாக அதிகரிப்பு
*29 குளங்களின் தரம் உயர்த்த ரூ.111.24 கோடி
*பாசன திட்டங்களுக்கு ரூ.6,607.17 கோடி
*ஊரக வேலை உறுதி திட்ட ஊதியத்தை ரூ.300 ஆகவும், பணிநாட்களை 150 நாட்களாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்
*மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும்
*நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி
*மீன்வளத்துறைக்கு ரூ.303.66 கோடி
*6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க ரூ.6.25 கோடி செலவில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
*150 கோடியில் காசிமேடு மீன்பிடித்துறைமுகம் மேம்படுத்தப்படும்
*மீனவர்கள் நலனுக்காக ரூ. 1,149.79 கோடி
*பாசன திட்டங்களுக்கு ரூ.6,607.17 கோடி
*10 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும்
*610 கோடி செலவில் நீர்நிலைகள் புனரமைப்பு பணிகள் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
*சீர்மிகு நகரங்களின் திட்டத்திற்கு ரூ.2,350 கோடி
*கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் ரூ.1,000 கோடி
*சென்னையில் புதிய மேம்பாலங்கள் கட்ட ரூ.500 கோடி ஒதுக்கீடு
*எம்எல்ஏ மேம்பாட்டு திட்டங்களுக்கு தலா ரூ.3 கோடி வழங்கப்படும்
*சென்னையி்ல 3 இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.2,056 கோடி ஒதுக்கீடு
*பள்ளிகல்வித்துறைக்கு ரூ.32,599.54 கோடி
*உயர்கல்வித்துறைக்கு ரூ.5369.09 கோடி
*மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.18,933.20 கோடி
நெடுஞ்சாலை பணிகள்
* ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க ரூ.623.59 கோடி
*நெடுஞ்சாலை துறைக்கு 17,899.17 கோடி
*சீர்மிகு நகரங்களின் திட்டத்திற்கு ரூ.2350 கோடி
*சென்னை வெளிவட்ட சுற்றுச்சாலை திட்டம் 1,750 கோடி
*16 மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாடு ரூ.6448.28 கோடி
*வேளாண்மைக்கான இலவச மின்சாரம் வீட்டு மின்சார மானியத்திற்காக ரூ.19,872.77 கோடி
*கொரோனா கால நிவாரணமாக ரூ.9370.11 கோடி செலவிடப்பட்டுள்ளது.
*நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.100 கோடி