தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு

SHARE

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதிகள் இன்று பிப்ரவ 26 மாலை அறிவிக்கப்படவுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல், ஏப்ரல், மே மாதத்தில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 24ம் தேதி முடிவடையவுள்ளது. இதனையடுத்து நேற்று தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவ படையினர் தமிழகம் வந்தனர்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மாலை 4:30 மணிக்கு டில்லியில் செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது, தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையை வெளியிடுகிறார். தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் துவக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


SHARE

Related posts

Leave a Comment