தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

SHARE

தென் தமிழகத்தில் , வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த வாரத்தில் தமிழகத்தில் ஓரளவுக்கு மழை பெய்தது.

இந்த நிலையில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 
வழிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.


பிற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும்,சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை அறிவிப்பில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE

Related posts

Leave a Comment