2 கட்டங்களாக 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் – மாநில தேர்தல் ஆணையர்

SHARE

அக்டோபர் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்துள்ளார்.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். உடனடியாக அமலுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிமுறை அக்டோபர் 16 வரை அமலில் இருக்கும். 9 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பார்வையாளராக நியமிக்கப்படுவார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம். ஊரக உள்ளாட்சி தேர்தல் 4 விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்.

கொரோனா விதிமுறைகள் பின்பற்றி தேர்தல் நடத்தப்படும்; தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைமுறைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்; வெப் ஸ்ட்ரீமிங் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை வேட்பாளர்கள் மீறினால், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 75 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்

* வேட்பு மனு தாக்கல் தொடக்கம் – செப்டம்பர் 15

* வேட்புமனு தாக்கல் நிறைவு – செப்டம்பர் 22

* வேட்புமனு பரிசீலனை –  செப்டம்பர் 23

* வேட்புமனு திரும்ப பெறுதல் – செப்டம்பர் 25

* அக்டோபர் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை


SHARE

Related posts

Leave a Comment