தமிழகத்தில் மேலும் 3,290 பேருக்கு கொரோனா பாதிப்பு

SHARE

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இன்று 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஏப்ரல் 2ம் தேதி நிலவரப்படி 3,290 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் பாதிப்பு 2வது நாளாக ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதுவரை 8.61 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். சென்னை,கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவள்ளூர், மதுரை பகுதியில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் 3,290 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,92,780 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 259 ஆய்வகங்கள் மூலமாக, இன்று மட்டும் 86,066 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 97 லட்சத்து 67 ஆயிரத்து 310 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 1,899பேர் ஆண்கள், 1,391 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,38,978 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,53,766 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது.

2ம் தேதி மட்டும் 1,715 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 61 ஆயிரத்து 424 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 12 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களில் 8 பேர் தனியார் மருத்துவமனையிலும் 4 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,750 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 18,606 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


SHARE

Related posts

Leave a Comment