ட்ரம்பை தூக்கி எறிவோம்-கமலா ஆவேசம்.

SHARE

டிரம்ப் தலைமையிலான ஆட்சியை துாக்கியெறிவோம்,” என, துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, ஜனநாயக கட்சி வேட்பாளர், கமலா ஹாரிஸ் அழைப்பு விடுத்துள்ளார்..

அமெரிக்க உச்ச நீதமன்ற நீதிபதி ருத் பாடர் கின்ஸ்பர்க், இம்மாத துவக்கத்தில் உயிரிழந்தார். புதிய நீதிபதியாக, ஆமி கோனி பாரட் என்பவரை, டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.

இது குறித்து பிரச்சாரத்தின் போது பேசிய கமலா ,அதற்கு இடம் கொடுக்க மாட்டோம் என, மக்கள் சபதம் ஏற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். டிரம்ப், தன் மோசமான செயல்பாடுகளால், ஆட்சியையும், பார்லிமென்ட் மாண்பையும் பாழாக்கி விட்டார்.
அரசியலை ஸ்தம்பிக்கச் செய்து, மக்களிடையே மோதலை துாண்டிவிட்டார். அவரது மோசமான செயல்பாடு, சுப்ரீம் கோர்ட் வரை நீண்டுள்ளது. இனி அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். டிரம்ப் ஆட்சியை அகற்றுவோம் என, சபதம் ஏற்போம்,என அவர் அறைகூவல் விடுத்தார்.


SHARE

Related posts

Leave a Comment