தமிழகத்தில் மூன்று ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ள நிலையில், ஒரு இடத்தில் செப்டம்பர் 13-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மூன்று ராஜ்யசபா இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் நிலையில், ஒரு இடத்துக்கான ராஜ்யசபா தேர்தல் செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுகவின் முகமது ஜானின் மறைவை தொடர்ந்து அந்த இடத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- வேட்பு மனு துவக்கம்- ஆகஸ்ட் 24
- வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் -ஆகஸ்ட் 31
- வேட்பு மனு பரிசீலனை – செப்டம்பர் 1
- திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பர் 3
- தேர்தல் நடைபெறும் நாள்; செப்டம்பர் 13 (காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை)