மழை-பொது மக்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை

SHARE

வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளதை அடுத்து பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது..அந்த பதிவில், மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், ஒரு வாரத்திற்கான அத்தியாவசியபொருட்கள், எரிவாயு, மண்ணெண்ணெய், மருந்து, பேட்டரிகள், டார்ச்கள், முகக்கவசங்கள் உள்ளிட்டவற்றை தங்களுடன் வைத்துக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


SHARE

Related posts

Leave a Comment