யாழ்பாணம் பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவு சின்னம் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் கடை அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
நாளை நடைபெறும் போராட்டத்திற்கு வியாபாரிகள் சங்கம் முழு ஒத்துளைப்பு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு யாழ்பாணத்தில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.