பணத்திற்காக பலி எண்ணிக்கையை உயர்த்தும் டாக்டர்கள்-ட்ரம்ப் குற்றச்சாட்டு

SHARE

கொரோனாவால் உயிரிழந்தால் கூடுதல் பணம் கிடைக்கும் என்பதால் பலி எண்ணிக்கையை டாக்டர்கள் உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் இதயப்பிரச்னை அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறுதி நாட்களில் உள்ள நோயாளிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால், அவர்கள் கொரோனாவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்படுகிறார்கள்.

கொரோனாவால் யாராவது உயிரிழக்கும்பட்சத்தில் டாக்டர்களுக்கு கூடுதல் பணம் கிடைக்கும் என்பதால், பலி எண்ணிக்கையை உயர்த்துகின்றனர்.

ஜெர்மனி உள்பட பல நாடுகளில் இதயப்பிரச்னை அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கொரோனாவால் உயிரிழந்தால், அவர்கள் இதயப்பிரச்சினை அல்லது புற்றுநோயால் இறந்ததாக அறிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் வெறும் 3 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுகின்றனர். உலகில் எந்த நாட்டையும் விட அமெரிக்காவில் தான் அதிக கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் தான் அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கிறது. தற்போது நாட்டில் இறப்பு எண்ணிக்கை குறைகிறது, மக்கள் குணமடைகின்றனர். அதற்கு நானும், எனது மனைவியும் உதாரணம். இவ்வாறு பிரச்சாரத்தின் போது ட்ரம்ப் பேசினார்.


SHARE

Related posts

Leave a Comment