பொருளாதாரத்தை சிதைத்து விட்டார்.,தடுப்பூசி பற்றி ஒன்றும் தெரியாது- ட்ரம்பை வெளுத்து வாங்கினார் ஜோபிடன்

SHARE

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தலின்போது, தங்கள் கொள்கைகள், சாதனைகள், திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து, இரண்டு கட்சியின் வேட்பாளர்களும் நேருக்கு நேர் விவாதம் நடத்துவர். அந்தவகையில் ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் நடைபெற்ற விவாதத்தில் இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டினர்.

விவாதத்தில் பேசிய பிடன் , ‛இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மிக மிக மெதுவான பொருளாதார மீட்புதான் இப்போது உள்ளது.

தடுப்பு மருந்து விவகாரத்தில் நாங்கள் உங்களை நம்புவதாக இல்லை; விஞ்ஞானிகளை தான் நம்புகிறோம். டிரம்ப் என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியாது; சொல்லப்போனால் அவருக்கு எதுவுமே தெரியாது,’ என கடுமையாக விமர்சித்து இருந்தார்

இதற்கு பதிலளித்த டிரம்ப், ‛கொரோனா விவகாரத்தில் ஜோ பிடன் சொல்வது எல்லாம் கேட்டு இருந்தால் இன்னும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்திருப்பார்கள். H1N1 வைரஸ் விவகாரத்தை ஜோ பிடன் கையாண்ட விதம் என்பது மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது என்றார்.. ஜோ பிடன் இந்த நாட்டின் பொருளாதாரத்தை முடக்கி வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்,’ என ட்ரம் குற்றம் சாட்டினார்.


SHARE

Related posts

Leave a Comment