பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு ட்ரம்பை கழற்றி விடும் மனைவி-அடுத்த கட்டத்திற்கு தயாராகும் ட்ரம்ப்

SHARE

அமெரிக்க அதிபர் பதவியை தொடர்ந்து டிரம்ப் தனது திருமண வாழ்க்கையையும் இழக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பதவியை தொடரலாம் என நம்பியிருந்த டிரம்பிற்கு அமெரிக்க மக்கள் ஏமாற்றத்தை தந்துள்ளனர்.

ஜோ பிடன் அதிபராக வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் பிரிட்டன் நாளிதழ் ஒன்றுக்கு டிரம்பின் மாஜி உதவியாளர் அளித்த பேட்டியில், மெலானியா டிரம்ப் அவரை விவாகரத்து செய்ய எண்ணி வருவதாக பரபரப்பை கிளப்பியுள்ளார்.

அதிபர் டிரம்பின் மூன்றாவது மனைவி மெலானியா. கடந்த 2005 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்தனர். அதிபரான பிறகு முதல் பெண்மணி அந்தஸ்தை அவருக்கே வழங்கினார் டிரம்ப்.

ஏற்கனவே திருமணம் ஆனவர்களுடன் விவாகரத்து பெற்றுவிட்டார். இந்த நிலையில் டிரம்பின் உதவியாளர்கள் ஒமரோசா மற்றும் ஸ்டெபைன் அளித்துள்ள பேட்டியில், டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய உடன் மெலானியா விவாகரத்து செய்வார் என்கின்றனர். அல்லது திருமணத்தை பணத்திற்கான திருமணம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


திருமணத்திற்குப் பிந்தைய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறது. டிரம்பின் தொழில்களில் தனது மகன் பாரோன் டிரம்பிற்கு இருக்கும் அளவிற்கு சம உரிமையை மெலானியாவும் கோருகிறார். டிரம்பை பற்றி பேட்டிகள் மற்றும் புத்தகங்களை வெளியிட கூடாது என்பதும் ஒப்பந்தத்தில் இருப்பதாக உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்த போதும் இதே போன்றதொரு ஒப்பந்தத்தை டிரம்ப் போட்டுக்கொண்டார்.


SHARE

Related posts

Leave a Comment