தமிழிசைக்கு இரட்டை குழந்தைகள்

SHARE

தெலுங்கானா, புதுச்சேரி என இரட்டை குழந்தைகளாக பாவிப்பதுடன் அதனை கையாளும் திறனும், மருத்துவரான எனக்கு உள்ளது என புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்று கொண்ட பின்னர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
இன்று பதவியேற்று கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை,
என் மீது நம்பிக்கை வைத்து கூடுதல் பொறுப்பு கொடுத்துள்ளார்கள். பதவிப்பிரமாணத்தின் போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. துணை நிலை கவர்னராக இல்லாமல், மக்களுக்கு துணை புரியும் கவர்னராக இருப்பேன். தெலுங்கானா, புதுச்சேரி என இரட்டை குழந்தைகள் என் கையில் உள்ளது. இரட்டை குழந்தைகளை கையாளும் திறன் மருத்துவரான எனக்கு உள்ளது.

இந்திய தடுப்பூசியை வெளிநாட்டினர் அதிகம் வாங்குகின்றனர். ஆனால், நமது நாட்டில் குறைவாக உள்ளது வேதனையாக உள்ளது. தடுப்பூசி போட்டு கொள்ள தயங்கக்கூடாது. கவர்னர் மற்றும் முதல்வரின அதிகாரம் எனக்கு தெரியும். அவரவர் அதிகாராத்திற்கு உட்பட்டு ஜனநாயக முறைப்படி செயல்பட வேண்டும் என்பது எனது விருப்பம்.

அரசு மீதான பெரும்பான்மை தொடர்பான கோப்பை இன்னும் பார்க்கவில்லை. இது தொடர்பாக அனைவரையும் ஆலோசித்து முடிவு செய்யப்படும். சட்டத்திற்கு உட்பட்டு அரசியல் நகர்வுகள் இருக்கும். எனது ஒவ்வொரு நகர்வும் புதுச்சேரி மக்களின் நலனுக்காக இருக்கும் என்றார்.


SHARE

Related posts

Leave a Comment