விஜய் சேதுபதி மகளுக்கு, ‘டுவிட்டரில்’ மர்ம நபர் ஒருவன், பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்தான்.இது குறித்து, சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரை தேடி வந்தனர்.
இதனிடையே டுவிட்டரில் மிரட்டல் விடுத்தவன் இலங்கையை சேர்ந்தவன் என்பதும் அங்கிருந்து டுவிட்டர் மூலம் மிரட்டல் விடுத்துள்ளான் என்பதை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர் மேலும் அவரை கைது செய்ய இண்டர்போல் போலீசார் உதவியுடன் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்