nகரள மாநில தலைநகர் திருவனந்தபுரம், மணியரா என்ற இடத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் நேற்று திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட சென்றார். அப்போது, அவருக்கு 2 செவிலியர்கள் அடுத்தடுத்து 2 கொரோனா தடுப்பூசி போட்டதாக தெரிகிறது.
அந்த பெண்ணுக்கு உடல் சோர்வு ஏற்பட்டதை தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டார். மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து சுகாதார துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

previous post
next post