காவி – காக்கி – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

SHARE

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரைக் பார்க்க சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ராகுல்காந்தி நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

தடை உத்தரவை மீறிச் சென்றதற்காக இருவரையும் உத்தர பிரதேச போலீசார் கைது செய்தனர். ராகுல்காந்தி கைது நடவடிக்கை குறித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது குறித்து உதயநிதி ஸ்டாலின்  டுவிட்டர் பதிவில், ‘உ.பி.யில் பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு ஆறுதல் கூறச்சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை உ.பி காவல்துறை தடுத்து தள்ளிவிட்டது மிகப்பெரிய அராஜகம். காவியும் காக்கியும் இணைந்து நடத்தும் அத்துமீறலை ஜனநாயக சக்திகள் கண்டிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment