மியான்மர் குறித்து ஐ.நா., தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு

SHARE

ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதற்கு எதிராக மியான்மரில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், அங்கு நிலவும் சூழ்நிலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 119 நாடுகள் ஓட்டு போட்டன. பெலாரஸ் மட்டும் எதிராக ஓட்டளித்தது. மியான்மர் மற்றும் அதன் அண்டை நாடுகளான இந்தியா, வங்கதேசம் மற்றும் பூடான், நேபாளம், சீனா,லாவோஸ், தாய்லாந்து, ரஷ்யா உள்ளிட்ட 36 நாடுகள் புறக்கணித்தன.

இது தொடர்பாக ஐ.நா.,விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி கூறியதாவது: மியான்மரின் அண்டை மற்றும் பிராந்திய நாடுகளுடன் ஆலோசனை நடத்தாமல், அவசர கதியில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது, தற்போதைய சூழ்நிலைக்கு உதவாது. மேலும், மியான்மரில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு காண முயலும் ஆசியான் அமைப்பின் முயற்சிகளுக்கும் எந்த பலனையும் அளிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.


SHARE

Related posts

Leave a Comment