உத்தரபிரதேசத்தில் மயான மேற்கூரை இடிந்து 18 பேர் பலி

SHARE

உத்தர பிரதேச மாநிலம் முராத்நகர் பகுதியில் நடந்த ஒரு இறுதிச்சடங்கில் பலர் கலந்து கொண்டனர். அப்போது மழை பெய்ய துவங்கியதால், மயான கட்டடத்தில் ஒதுங்கினர். அப்போது,மயானத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.


இந்த சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது வரை இடிபாடுகளில் இருந்து 32 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் யோகிஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment