கலைகட்டியது அமெரிக்க அதிபர் தேர்தல்; 5 கோடி தபால் வாக்குகள் பதிவு

SHARE

அமெரிக்காவில் நவம்பர், 3ல், அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தபால் வாயிலாக வாக்களிக்கும் முறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தபால் முறையில் இதுவரை வாக்களித்தோர் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இது குறித்த கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவில், 18 மற்றும் அதற்கு அதிக வயதுடைய மக்களின் எண்ணிக்கை, 25.7 கோடி ஆக உள்ளது. இந்த அதிபர் தேர்தலில், 24 கோடி பேர், ஓட்டளிக்க தகுதி உடையோராக உள்ளனர்.


அனைத்து மாகாணங்களிலும், தேர்தல் அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர். அதில், பலரும் முன்கூட்டியே ஆர்வத்துடன், தபால் வாயிலாக ஓட்டளித்து வருவது தெரியவந்துள்ளது. இதுவரை, 5.87 கோடி மக்கள், வாக்களித்துள்ளனர். கடந்த, 2016 அதிபர் தேர்தலில், 5.83 கோடி பேர், தபால் மூலம் வாக்களித்தனர். ஆனால், இம்முறை தேர்தலுக்கு, இன்னும் ஒரு வாரத்திற்கும் மேல் உள்ள நிலையில், அதைவிட அதிகமான மக்கள் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புளோரிடா, வட கரோலினா, பென்சில்வேனியா உள்ளிட்ட முக்கிய மாகாணங்களில், ஜனநாயக கட்சியின் ஜோ பிடனுக்கு ஆதரவாக, அதிகமானோர் வாக்களித்து இருப்பது தெரியவந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தபால் ஓட்டுப்பதிவு அதிகமாக இருக்கும் என்பதால், தேர்தல் முடிவுகள் உடனடியாக வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. முடிவுகளை அறிய, கணிசமான நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


SHARE

Related posts

Leave a Comment