பிரதமர் மோடியிடம் அமெரிக்கா 157 கலைப்பொருட்கள் ஒப்படைப்பு

SHARE

 மோடி நாடு திரும்பும்போது அவரிடம் இந்தியாவைச் சேர்ந்த 157 பழங்கால கலைப் பொருள்களை அமெரிக்கா ஒப்படைத்தது.

பிரதமரின் பயணத்தின்போது இந்தியாவைச் சோ்ந்த 157 பழங்கால கலைப் பொருள்களை அமெரிக்கா அவரிடம் வழங்கி உள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கலாசார பொருள்களின் திருட்டு, சட்டவிரோத வா்த்தகம், கடத்தல் ஆகியவற்றை எதிா்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை வலுப்படுத்த ஜனாதிபதி பைடனும், பிரதமா் மோடியும் தங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினா். அதன் ஒரு பகுதியாக இந்தக் கலைப் பொருள்கள் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 71 கலாசார பொருள்கள், இந்து மதம் தொடா்பான 60 சிலைகள், பெளத்த மதம் தொடா்பான 16 சிலைகள், சமண மதம் தொடா்பான 9 சிலைகள் அடங்கும். 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஒன்றரை மீட்டா் ரேவந்தா கற்சிலை முதல் 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 8.5 செ.மீ. உயரமுள்ள நோ்த்தியான வெண்கல நடராஜா் சிலை வரை இதில் இடம்பெற்றுள்ளன என்று அதில் கூறப்பட்டிருந்தது. 


SHARE

Related posts

Leave a Comment