திட்டமிட்டபடி ஆகஸ்ட்31 நிறைவு பெறுவதற்கு முன்னதாக அமெரிக்க ராணுவம் முழுவதும் வெளியேறி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின், கடைசி வீரர் வெளியேறும் புகைப்படத்தையும் அந்நாடு வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக வாஷிங்டன்னில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தளபதி கென்னத் மெக்கன்ஜி
ஆப்கனில் இருந்து நமது ராணுவ வீரர்கள் முழுமையாகவும் வெளியேறியது, கடந்த 2001 செப்டம்பர் 11க்கு பிறகு துவங்கிய 20 வருட போர் நிறைவு பெற்றதையும் இது குறிக்கிறது. காபூலில் இருந்து கடைசி அமெரிக்க விமானம், திங்கட்கிழமை இரவு 19:29 ஜிஎம்டிக்கு கிளம்பியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
அமெரிக்க ராணுவத்தினர் வெளியேறியதை, பல இடங்களில் தலிபான்கள் துப்பாக்கிகளால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டாடியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன..