தொப்பிக்குக் கீழே, மூளை இருக்கிறதா கவர்னருக்கு உத்தவ் தாக்கரே கேள்வி.

SHARE

வெறும் கோயில்களை திறப்பது மட்டுமே எங்களின் இந்துத்துவா அல்ல. இந்துத்துவா என்றால் என்ன என்பதைப் பற்றி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ‛கோயில்களை திறந்து பூஜை செய்வது மட்டும் இந்துத்துவா அல்ல’ என அழகாக விளக்கியுள்ளார் என்று மகாராஷ்ட்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாரஷ்ட்டிர மாநில ஆளுநர் கோஷ்யாரி கோயில் திறப்பு குறித்தும் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே-ன் இந்துத்துவா குறித்தும் சில நாட்களுக்கு முன்னர் கேள்வியெழுப்பினார் .

இதற்கு பதிலளிக்கும் வகையில் உத்தவ் தாக்கரே இவ்வாறு தெரிவித்துள்ளார்,மேலும் நீங்கள் அணியும் கறுப்பு தொப்பிக்குக் கீழே, மூளை இருந்தால் மோகன் பகவத் சொல்வதைப் புரிந்துகொள்ளுங்கள் எனவும் காட்டமாக அவர் தெரிவித்துள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment