விமான நிலையத்தில் 2 மணி நேரம் கவர்னரை காக்க வைத்த மஹாராஷ்ட்ர அரசு-உத்தவ் தாக்கரேயின் தில் நடவடிக்கை

SHARE

விமான நிலையத்தில் 2 மணி நேரம் கவர்னரை காக்க வைத்த மஹாராஷ்ட்ர அரசு-உத்தவ் தாக்கரேயின் தில் நடவடிக்கை என கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மஹாராஷ்டிராவில், மாநில கவர்னரான, பகத்சிங் கோஷ்யாரிக்கும், மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே, பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில், மஹாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்களை திறக்கும் விவகாரத்தில், இருவர் இடையே கடும் வார்த்தை போர் மூண்டது. மாநில அரசின் பல்வேறு முடிவுகளுக்கு, கவர்னர் கோஷ்யாரி முட்டுக்கட்டை போடுவதை தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறது.

இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் செல்வதற்காக, கவர்னர் கோஷ்யாரி, மும்பை விமான நிலையத்திற்கு வந்தார். பொதுவாக, கவர்னர் மாநில அரசின் தனி விமானத்தில் பயணிப்பது வழக்கம். எனவே, அரசு விமானத்துக்காக விமான நிலைய காத்திருப்பு அறையில், இரண்டு மணி நேரம் காத்திருந்தார். பின் விமானம் வந்ததும் அதில் ஏறி அமர்ந்தார். 15 நிமிடங்கள் ஆகியும் விமானம் புறப்படாததை அடுத்து, அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ‘விமானம் புறப்படுவதற்கான அனுமதி கிடைக்கவில்லை’ என, விமான பைலட், கவர்னரிடம் தெரிவித்தார்.


இதையடுத்து, அரசு விமானத்தில் இருந்து இறங்கிய கவர்னர் கோஷ்யாரி, பயணியர் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணத்தை தொடர்ந்தார். ‘கவர்னரின் பயண திட்டம் குறித்து, ஒரு வாரம் முன்னதாகவே மாநில அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டும், அனுமதி மறுக்கப்படுவது வழக்கத்துக்கு மாறாக உள்ளது’ என, கவர்னர் அலுவலக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ”இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் விபரம் கேட்கப்படும்,” என, துணை முதல்வரும், தேசியவாத காங்., மூத்த தலைவருமான, அஜித் பவார் தெரிவித்தார்.

புதுச்சேரி தமிழகம் போன்ற மாநிலங்களில் கவர்னர்கள் நடவடிக்கையில் பல திட்டங்கள் முடங்கியிருக்கும் நிலையில் உத்தவ் தாக்ரேவின் இந்த நடவடிக்கை அவரது தனித்துவத்தை காட்டுவ்தாக சிவசேனா நிர்வாகிகள் எமது செய்தியாளரிம் கருத்து தெரிவித்துள்ளனர்.


SHARE

Related posts

Leave a Comment