சென்னை வந்தது கொரோனா தடுப்பூசி மருந்துகள்.

SHARE

பல மாதங்களாக இரவு-பகலாக நடந்து வந்த ஆய்வுப்பணிகளின் பலனாகவும் முதற்கட்டமாக 2 தடுப்பூசிகள் தற்போது மக்களை காக்கும் ஆயுதங்களாக உருவாகி இருக்கின்றன. பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்சின்’ தடுப்பூசியும், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசி, ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் சீரம் நிறுவனத்தின் தயாரிப்பிலும் பயன்பாட்டுக்கு தயாராகி இருக்கின்றன.
இவ்வாறு தடுப்பூசிகளின் தயார் நிலை, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான மாநிலங்களின் முன் தயாரிப்புகள் அனைத்தும் சிறப்பாக இருப்பதை உறுதி செய்தை தொடர்ந்து, இந்த தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது.
பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்டக்குழுவின் ஆலோசனைக்குப்பின், வருகிற 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கும், பின்னர் 50 வயதை கடந்தவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கும் இந்த தடுப்பூசி போடப்படுகிறது.
புனேயில் இருந்து இன்று காலை கொரோனா தடுப்பூசிகள் சென்னை வர உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “ 5.56 லட்சம் கொரோனா தடுப்பு மருந்து இன்று தமிழகம் வர உள்ளது. ஒருவருக்கு 30 நாள் இடைவேளையில் 2 முறை தடுப்பூசி போடப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும். சென்னையில் இருந்து தமிழகத்தின் 10 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment