‘தடுப்பூசி பாஸ்போர்ட்’ வெளிநாடுகள் செல்ல புதிய நடைமுறை.

SHARE

கொரோனாவால் எட்டு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 17.60 லட்சம் பேர் இறந்துள்ளனர். . பைசர் மாடர்னா உள்ளிட்ட பல நிறுவனங்கள் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளன. பிரிட்டன், ரஷ்யா ஆகியவை மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றன. இதையடுத்து தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்காக பல நிறுவனங்கள் ‘தடுப்பூசி பாஸ்போர்ட்’ என்ற சான்றிதழ்களை வழங்க உள்ளன.

இந்தவகையில் ‘காமன் டிரஸ்ட் நெட்ஒர்க்’ என்ற நிறுவனம் ‘காமன்பாஸ் ஆப்’ என்ற செல்போன் செயலியை உருவாக்கியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் மற்றும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இந்த செயலியில் தங்கள் சிகிச்சை விபரங்களை அளிக்கலாம்; அவர்களுக்கு ‘கியூஆர் கோடு’ தொழில்நுட்பத்தில் ‘தடுப்பூசி பாஸ்போர்ட்’ என்ற சான்றிதழ் வழங்கப்படும். அதை செல்போனில் பதிவிறக்கிக் கொள்ளலாம். இந்த சான்றுடன் வருவோரை பொது இடங்கள், பொழுதுபோக்கு கூடங்கள், திரையரங்குகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் அனுமதிக்க பல நாடுகள் திட்டமிட்டுள்ளன. இதன் வாயிலாக மக்களின் சுகாதார பாதுகாப்பை சுலபமாக உறுதி செய்து கொள்ள முடியும்.

‘கத்தாய் பசிபிக் விர்ஜின் அட்லாண்டிக்’ உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் தடுப்பூசி பாஸ்போர்ட் நடைமுறைக்காக காமன் டிரஸ்ட் நெட்ஒர்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன. ஐ.பி.எம். நிறுவனமும் ‘டிஜிட்டல் ஹெல்த் பாஸ்’ என்ற செல்போன் செயலியை உருவாக்கியுள்ளது. பல நாடுகள் தடுப்பூசி பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாட்டு பயணியரை மட்டுமே அனுமதிக்க திட்டமிட்டுள்ளன.


SHARE

Related posts

Leave a Comment