நடிகர் வடிவேலுவை பாரதிய ஜனதாவிற்கு இழுக்க தீவிர முயற்சி…?

SHARE

நடிகர் வடிவேலுவை பாஜகவில் இணைக்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக மக்களிடம் மிக பிரபலமாக இருக்கும் வடிவேலு தற்போது படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

அவரது மீம்கள் தான் சமூக வலைதளத்தில் அதிக அளவில் உலாவருகின்றன
சினிமாவில் தற்போது அவருக்கு அதிக வாய்ப்பில்லை.

இந்த நிலையில் நடிகர் வடிவேலு தற்போது பா.ஜனதாவில் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பா.ஜனதா ,சட்டசபை தேர்தலுக்கு முன் தனது பிரசார யுக்திகள் குறித்து தீவிர ஆலோசனையில் உள்ளது அதற்கென பிரபலங்களை தயார்படுத்தி வருகிறது.அதற்காக தற்போது நடிகர் வடிவேலுவையும் பா.ஜனதாவில் இணைக்கப்போவதாக செய்திகள் உலாவருகின்றன் ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என்ற போதும் முயற்சிகள் தொடர்வதாகவும்,வடிவேலுவும் இதற்கு மறுபேதும் தெரிவிக்கவில்லை என தெரிகிறது.
ஏற்கனவே  பா.ஜனதாவில் நட்சத்திர பட்டாளங்கள் குவிந்துள்ளனர். கங்கை அமரன், கஸ்தூரி, ராதாரவி, கவுதமி, நமீதா, விஜயகுமார், காய்த்ரி ரகுராம், பேரரசு, எஸ்.வி சேகர், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், குஷ்பு உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.


SHARE

Related posts

Leave a Comment