தமிழ் மக்களின் அசையை நிறைவேற்ற மீண்டும் பரபரப்பாக வருவேன் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
மதுரை அருகே தற்போது தங்கியுள்ள பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நேற்று தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார்.
சமூக வளை தளங்களில் வடிவேலு பிறந்த நாளை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிலையில் நான் மீண்டும் திரை உலகில் பரபரப்பாக வலம் வருவேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.