பிரபல வசந்த் அன்,கோ அதிபரும் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான வசந்தகுமார் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட வசந்தகுமாருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாகவே ஆபத்தான நிலையில் இருந்த அவர் சற்று முன்னர் மரணம் அடைந்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் டெல்லி காங்கிரஸ் தலைமையால் கவனிக்கப்பட்ட தலைவராக வளர்ந்து வந்த அவரின் இழப்பு தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக முடிந்துள்ளது.