திருத்திணியில் வேல் யாத்திரை- முருகன் கைது.

SHARE

திருத்திணியில் தடையை மீறி வேல் யாத்திரையை துவங்க முயன்ற தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகனை போலீசார் கைது செய்தனர்.

டிசம்பர் 6 வரை திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை ‛வேல் யாத்திரை’ நடத்த உள்ளதாக தமிழக பாஜ., தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனா பரவலுக்கான அச்சுறுத்தல் காரணமாக வேல்யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது. மேலும், ‛வேல் யாத்திரை தொடர்பாக அரசு பிறப்பிக்கும் உத்தரவுக்குப் பின் வழக்கு தொடரலாம்,’ எனக்கூறி நீதிமன்றம் இவ்வழக்கை முடித்து வைத்தது.

கடவுளை வழிபடுவது எனது அடிப்படை உரிமை. அதன் அடிப்படையில் திருத்தணிக்கு செல்கிறேன். கடவுள் முருகனின் துணைக்கொண்டு திருத்தணியில் வெற்றிவேல் யாத்திரையை தொடங்குகிறோம்,’ என எல்.முருகன் கூறினார்.

பாஜ., சார்பில் நடைபெறும் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி வேல்யாத்திரையை திருத்தணியில் துவக்க பா.ஜ., தலைவர் முருகன் திருத்தணி நோக்கி புறப்பட்டார். இவரையும் , இவருடன் சென்ற வாகனங்களையும் திருவள்ளூர் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். சில வாக்குவாதத்திற்கு பின்னர் முருகன் மற்றும் அவருடன் 5 வாகனங்கள் மட்டும் திருத்தணிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. . தொடர்ந்து திருத்தணி சென்ற தமிழக பா.ஜ., தலைவர், திருத்தணி முருகன் கோவிலில் வழிபாடு நடத்தினார்.

தொடர்ந்து வேல் யாத்திரை துவங்கும் இடத்திற்கு வந்த முருகன், கட்சியினர் மத்தியில் பேசினார், அப்போது,நாம் மற்ற மதத்தினரை மதிப்பவர்கள் தான். நம்மை கண்டபடி பேசும் போது, நிச்சயமாக சும்மா இருக்க முடியாது என்றார்

தொடர்ந்து வேல் யாத்திரையை, துவக்க முருகன் முயற்சி செய்தார். இதனையடுத்து தடையை மீறி துவங்க முயன்ற யாத்திரையை தடுத்து நிறுத்திய போலீசார், முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகளை கைது செய்து அழைத்து சென்றனர்.


SHARE

Related posts

Leave a Comment