முதலமைச்சர் பழனிசாமியை நடிகர் விஜய்சேதுபதி நேரில் சந்தித்தார். முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி நேரில் சந்தித்து விஜய்சேதுபதி ஆறுதல் கூறினார். தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் படத்திற்கு விஜய்சேதுபதி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து 800 திரைப்படம் கைவிடப்பட்டதா? என்ற செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “நன்றி, வணக்கம்” என தான் டிவிட்டரில் பதிவிட்டதை மேற்கோள் காட்டினார்,தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப நன்றி வணக்கம் என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம், இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்தார்.
சில மணி நேரங்களுக்கு முன்னர் 800 படத்தில் நடிப்பது உறுதி என அவர் தெரிவித்திருந்த நிலையில் திடீரென இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார்.