சென்னையில் இயற்கை சூழலில், சர்வதேச தரத்துடன் VIT குழுமத்தின் VIS பள்ளி -திறந்துவைக்கிறார் இந்திய துணை ஜனாதிபதி

SHARE

News asia live

உமாபதி கிருஷ்ணன்

1990களுக்கு பின் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில்,உயர்கல்வி சாலைகள் வளர்ந்தோங்க துவங்கின.

இதனை தொடர்ந்து, உயர்நிலை மற்றும் மேல் நிலை ஆங்கில வழி கல்விக்கூடங்களும் பெருகின.

பின்னர் சர்வதேச தரத்திலான கல்விச்சாலைகளுக்கான தேவைகள் இருந்தன.

அந்த தேவைகள் வரும் முன்னரே வளர்ந்த நாடுகளுக்கு இணையாக என சொல்வதை விட, வளர்ந்த நாடுகளில் உள்ள கல்விச்சாலைகளுக்கு ஒரு படி மேலே தனது தரத்தை உயர்த்தி, இந்தியாவின் டாப் 10 பல்கலைகழகங்களில் ஒன்றாக, விஸ்வரூபம் எடுத்தது வேலூர் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைகழகம்.

சில வளரும் நாடுகளும் ,ஏன் வளர்ந்த நாடுகள் கூட தங்கள் நாட்டில் விஐடியின் கிளையை துவங்குமாறு அழைப்பு விடுக்கும் அளவிற்கு பெருமை பெற்றது இந்த பல்கலைகழகம்.

தமிழகத்தில் பல பொறியியல் சார்ந்த பல்கலைகழகங்கள் தங்கள் தரத்தை உயர்த்திக்கொள்ள வழிகாட்டியாக விளங்கியது விஐடி.

G.V.SELVAM

இந்தியாவில் புகழ் பெற்ற இந்த விஜடி குழுமத்தின் பிரதான அங்கத்தினரும், விஜடியின் துணை தலைவருமான திரு,ஜி.வி.செல்வம் தமிழகத்தின் தலைநகர் சென்னையில், சர்வதேச தரத்துடன் வேலூர் இன்டர்நேசனல் ஸ்கூல் என்ற பள்ளிக்கூடத்தை நிறுவியிருக்கிறார்.

இந்த சர்வதேச பள்ளி இயற்கையான சூழல் சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே சர்வதேச தரமான கல்வியை வழங்குவதில் இந்திய நாட்டிற்கே வழிகாட்டியாக திகழம் விஜடியின் துணை தலைவர் திரு.ஜி.வி.செல்வம், இந்த பள்ளிக்கூடத்திற்கு தலைமை ஏற்பதால்,இந்திய பெற்றோர்களிடம் மட்டுமின்றி ,தெற்காசியாவில் உள்ள தமிழர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.


SHARE

Related posts

Leave a Comment