நியூ கலிடோனியா தனி நாடாக வேண்டுமா -? இன்று வாக்கெடுப்பு

SHARE

பாரிஸில் இருந்து 16,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நியூ கலிடோனியா.

இந்த தீவுக்கூட்டம் பிரான்ஸ் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது.இந்த தீவை, தனி நாடாக அங்கீகரிக்க வேண்டுமென 30 ஆண்டுகளாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நியூ கலிடோனியா தனி நாடாக வேண்டுமா அல்லது பிரான்ஸின் அங்கமாக இருக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் வாக்கெடுப்பு இன்று மீண்டும் நடைபெறுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற வாக்கெடுப்பில் 56.4 சதவீத மக்கள் பிரான்ஸுடன் இருப்பதையே விரும்பினர்.

இன்றைய வாக்கெடுப்பின் முடிவில் நியூ கலிடோனியா தனி நாடாகுமா என்பது குறித்து தெரியவரும்.


SHARE

Related posts

Leave a Comment