ஒ.பி.எஸ்ஆ – இ.பி.எஸ்ஆ அக்டோபர் 7 ல் அறிவிப்பு

SHARE

அ.திமு.க.,வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி அக்டோபர்,7 ல் அறிவிப்பு வெளியிடப்படும் என துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்யாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி ; வரும் 7 ம் தேதி அ.தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் கூட்டாக அறிவிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த மனக்கசப்பும் இல்லை. அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் அறிவிப்பு வரும் அனைவரின் மனம் பாதிக்காத வகையில் கட்சியின் நலன் கருதி அறிவிப்பு வரும் என கூட்டத்தில் பங்கேற்ற வைத்திலிங்கம் எம்.பி.கூறினார்.


SHARE

Related posts

Leave a Comment