ஒமைக்ரானுக்கு எதிராக செயல்படுகிறதா தடுப்பூசி ? உலக WHO பதில்

SHARE

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து படிப்படியாக விலகி வருகிறது. இந்த நிலையில், தற்போது கொரோனாவின்  மற்றொரு பிரிவான ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் தாக்குகிறது. 

ஒமைக்ரான் தற்போது பல நாடுகளில் பரவி வரும் நிலையில், தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசி இந்த புதிய வைரசுக்கு எதிராக செயல்படுமா என்பது பல்வேறு தரப்பினரின் கேள்வியாக உள்ளது.

ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்துகள் இல்லாமலேயே 10ல் இருந்து 12 நாட்களில் குணமடைகின்றனர் என தென் ஆப்ரிக்க மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவிற்கான இயக்குனர் டாக்டர் பூனம் கேட்ரபால் , கொரோனா தற்போது பல பிறழ்வுகளாக உருவெடுத்து வருகிறது. உலக நாடுகள் கொரோனாவிலிருந்து தடுப்பூசியின் மூலம் விடுபட்டு வருகிறது. தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள், ஒமைக்ரான் அதிகம் பரவுவதற்கான வாய்ப்பை தடுக்கும். அதே நேரத்தில் புதிய தொற்றுக்கள் பரவுவதை முழுமையாக தடுக்காது என்பதை அறிவது முக்கியம். 
நோய்த்தொற்றினால் கடுமையான பாதிப்பினை எதிகொள்ளும் நபர்கள் மற்றும் குறைவான நோய் எதிர்ப்பு திறன் கொண்ட நபர்களுக்கு தடுப்பூசியின் கூடுதல் டோஸ் தேவைப்படுகிறது. மேலும் வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசியின் செயல்பாடுகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. என்று கேட்ரபால் கூறினார்.


SHARE

Related posts

Leave a Comment