புதிய நோயாளிகளை உருவாக்கும் ஊடரங்கு தளர்வுகள் ?நிபுணர்கள் எச்சரிக்கை

SHARE

கொரோனா தொற்றின் வேகம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. . கடந்த 1 வாரத்தில் மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிடம் சிக்கி உள்ளனர்.

இந்தியாவில் இவ்வாறு கொரோனாவின் வேகம் அதிகரிப்பதற்கான காரணம் குறித்து நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலின் தொற்று நோய்கள் பிரிவு தலைவர் டாக்டர் சமிரன் பண்டா கூறுகையில், ‘கொரோனா பரிசோதனையின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதிக எண்ணிக்கையிலான புதிய நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். அத்துடன் ஊரடங்கு தளர்வுகள் மற்றும் கொரோனாவுக்கு எதிராக மக்களிடம் நிலவும் மெத்தனப்போக்கு போன்றவையும் தொற்றின் வேகம் அதிகரிப்பதற்கான காரணங்கள் ’ என தெரிவித்தார்.

அறிகுறி இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகள் கொண்டவர்களால் இந்த நோய் அதிகமாக பரவுவதாக தெரிவித்த பண்டா, இந்தியாவில் கொரோனாவின் இந்த வேகம் எதிர்பார்த்ததுதான் எனவும், எனினும் மாநிலங்களில் ஒரே சீராக இல்லாதது ஆறுதலானது என்றும் தெரிவித்தார்.

முன்னணி வைராலஜிஸ்டான டாக்டர் சாகித் ஜமீல் கூறும்போது, ‘முக கவசம் அணிதல், கைகளை கழுவுவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற அறிவுரைகளை மக்கள் புறக்கணித்துள்ளனர். இதற்கு காரணம், நாட்டில் தொற்றில் இருந்து மீள்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு, குறைவான சாவு விகிதம் போன்ற அறிவிப்புகளால் ஏற்பட்டுள்ள மெத்தனமே ஆகும். ஆனால் நாம் அதிக தினசரி பாதிப்பை கொண்டுள்ளோம். உலக அளவில் 3-வது அதிக நோயாளிகளை பெற்றிருக்கிறோம் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று எச்சரித்தார்.

ஊடரங்கு தளர்வுகள் புதிய நோயாளிகளை உருவாக்கும் எனக்கூறிய அவர், தற்போதைய நிலையில் பலி எண்ணிக்கையை குறைப்பதே முக்கியமானது எனவும், கூறினார்.


SHARE

Related posts

Leave a Comment