சென்னையில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

SHARE

எட்டாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் நடைபெறுவுள்ளதாக . மாநாட்டு அமைப்பாளர் டாக்டர் வி ஆர் எஸ் சம்பத்,தெரிவித்துள்ளார்.

சென்னை உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு-2021 மற்றும் எட்டாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு வருகின்ற டிசம்பர் மாதம் 27ம் தேதி முதல்29 தேதி வரை சென்னை கிண்டியில் உள்ள ஹோட்டல் லீ ராயல் மெரிடியனில் நடைபெற உள்ளது.

உலகத் தமிழர் பொருளாதார மையம், சென்னை வளர்ச்சி கழகம் இனைந்து நடத்தும் இந்த மாநாடு , மாநில அரசு, மத்திய அரசு, சில அயல் நாடு அரசுகள், உலகம் முழுவதும் உள்ள வர்த்தக தலைவர்கள், தொழிலதிபர்கள், தொழில்புரிவோர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர் உதவியோடு நடைபெற உள்ளது.

இம்மாநாட்டில் தொழிலதிபர்கள் வணிக நிறுவனத் தலைவர்கள், விழை தொழில்புரிவோர், சுயதொழில்புரிவோர், புதிய கண்டுபிடிப்பில் வெற்றி பெற்றவர்கள் இப்படி எல்லோரும் ஒன்று கூடவும் வணிக வளர்ச்சி, முதலீடு வாய்ப்புகள், பொருளாதார வளர்ச்சிக்காக விழை தொழில் புரிவோரிடம் பணிகளை ஒப்படைப்பு செய்தல், உலகளாவிய கூட்டுறவினை ஏற்படுத்துதல் தொடர்பான விவாதங்களும் இந்த மாநாட்டில் நடைபெறுகிறது.

அமைச்சர்கள், கொள்கை வகுப்போர், அரசு அதிகாரிகள், சமுதாய தலைவர்கள், பொருளாதார வல்லுனர்கள் போன்றவர்களை மாநாட்டுக்கு வரவழைத்து அமைதி வழியில் மதநல்லிணக்கத்தோடு வாழும் முறையில் வளர்ச்சி குறித்தும் இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

இம்மாநாடு முற்றிலும் புதுமையான சிறப்பு நிலை வாய்ந்த சூழலில் மூன்று நாள் நிகழ்ச்சி அமைந்திருக்கும். மேலும் சிறப்பு வாய்ந்த பேச்சாளர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு தாங்கள் எதிர்கொண்ட வாய்ப்புகள் சவால்கள் பற்றிய அனுபவங்களையும் கூறுகிறார்கள். முதல் மாநாடு சென்னையில், இரண்டாவது துபாய் நாட்டில், மூன்றாவதாக சென்னையில், நான்காவது தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில், ஐந்தாவது புதுச்சேரி மாநிலத்தில், ஆறாவது மாநாடு மீண்டும் சென்னை மாநகரில், ஏழாவது மாநாடு இணையவழியில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து எட்டாவது மாநாடாக இந்த மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவும் , இங்குள்ள வணிக வாய்புகள் குறித்தும் விவாதிக்க தனித்தனி அமர்வு மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டின் இறுதி நாளன்று தலைசிறந்த 10 தமிழ் ஆர்வலர்களுக்கு “உலக தமிழ்மாமணி” விருதும் வழங்கப்பட உள்ளது. மாநாட்டின்போது ஒவ்வொரு நாளின் இறுதியிலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. உள்நாட்டு பேச்சாளர்கள் நேரில் கலந்து கொண்டு சிறப்புரை வழங்குகிறார்கள். வெளிநாட்டு பேச்சாளர்கள் இனைய வழியாக கருத்துரை வழங்க உள்ளனர்.எனவே இந்த மாநாடு உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் பொருளாதாரத் துறையிலும், கலை பண்பாட்டு துறையிலும், சமூக நலத்துறையிலும் மற்றும் திறன் மேம்பாட்டு துறையிலும் சிறப்புற விளங்க ஊக்குவிப்பாக அமையும்.

இந்த மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் திரு.துரைமுருகன், திரு.தங்கம் தென்னரசு, திரு. அன்பரசன், ம
ஆகியோர்
கலந்துகொள்வதற்கு இசைவு தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் டாக்டர் ஜி. விஸ்வநாதன், எஸ். ஜெகத்ரட்சகன், ஆர் வீரமணி, வி.ஜி சந்தோஷம் ,பழனி ஜி. பெரியசாமி, அபுபக்கர் போன்றவர்களும் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். கயான நாட்டின் முன்னாள் பிரதம அமைச்சர் டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து. மொரீசியசு நாட்டு முன்னாள் குடியரசுத் தலைவர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, தென்ஆப்பிரிக்கா அமைச்சர் ரவிபிள்ளை, மலேசிய முன்னாள் அமைச்சர் மாரிமுத்து ,இலங்கை முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணையவழியில் உரையாற்ற இருக்கின்றார்கள்.

இந்த மாநாடு பற்றிய முழு தகவல்களையும் www.economic- conference.com என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என மாநாட்டு அமைப்பாளர் டாக்டர் வி ஆர் எஸ் சம்பத்,தெரிவித்துள்ளார்.,


SHARE

Related posts

Leave a Comment