வளர்ச்சியை விரும்பாதவர்கள் பிரச்சனை செய்கிறார்கள்-யோகி ஆதித்யநாத் டிவிட்

SHARE

உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சியை விரும்பாதவர்கள்தான் இனக் கலவரங்களையும், வகுப்புவாதக் கலவரங்களையும் தூண்டிவிடுகிறார்கள். எந்த மிகப்பெரிய பிரச்சினையையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச  முதல்வர் யோகி ஆதித்யநாத்  தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சியை விரும்பாதவர்கள்தான், இனவாத, வகுப்பு வாத கலவரங்களைத் தூண்டிவிடுகிறார்கள். 
இந்தக் கலவரத்தின் மூலம் அரசியல்ரீதியான ஆதாயங்களை, வாய்ப்புகளைப் பெற முயல்கிறார்கள். தொடர்ந்து சதி செய்து வருகிறார்கள்.மிகப்பெரிய பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் பெண்களின் பாதுப்பை உறுதி செய்வதில் இந்த அரசு கடமைப்பட்டுள்ளது” எனவும் அவர் எனப்பதிவிட்டுள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment